வசந்தம்
Thursday, 20 March 2014
Monday, 24 February 2014
காதல் வாசகம்
காட்சியாகி காந்தமாகி
நினைவாகி கனவாகி
கற்பனையாகி கவியாகி
வாழ்வின் வசந்தமானவளே
என்சொல்லி வாழ்த்துவனே
~வசந்தம்.
நினைவாகி கனவாகி
கற்பனையாகி கவியாகி
வாழ்வின் வசந்தமானவளே
என்சொல்லி வாழ்த்துவனே
~வசந்தம்.
Sunday, 25 August 2013
பிதாகரஸ் தேற்றம்
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பைதகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்
C = (a - a/8) + (b/2)
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின்ன் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
ஒரு உதாரணம்...
a=15
b=37
இன்றைய பிதாகரஸ் தேற்றம்
c = sqrt ((15 x 15 ) + (37 x 37))
= sqrt (225+1369)
= sqrt 1594
= 39.92
போதையனார் தமிழ் செய்யுளின் படி ....
c = (15 - 15/8) + 37/2
= 13.125 + 18.5
= 31.625 - தவறான விடை..
ஆனால் இலக்கங்களை இடமாற்றிப் பார்ப்போம்..
(ஏனெனில் பிதாரகர்ஸ் தேற்றத்தில் எண்களை இடம் மாற்றினாலும் மதிப்பு மாறாது. ஆனால் இங்கே சமன்பாடு அப்படி அல்ல. எனவே இப்படி முயற்சிப்போம்..)
a = 37
b =15
c = 37 - 37/8 + 15/2
= 32.375 +7.5
= 39.875 --- கிட்டத்தட்ட பிதாகரஸின் விடையை(39.92) ஒத்து அமைகிறது..
Monday, 19 August 2013
என் காதல்...........!!!
எனது கனவுகளைக்
களவாடியவளும் நீ தான்
என்னை எதிர்பார்க்க
வைத்தவளும் நீ தான்......
உன் பார்வைகளின்
அர்த்தங்களைச் சொல்லிவிடு
உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது
என் கண்கள்.......
பறிக்கப்படாத மலரைப் போன்றது
சொல்லப்படாத என் காதல்..........!!!
ஒரு பொய்யாவது சொல்
உன் காதல் நான் தான் என்று........
-வசந்தம்.
எனது கனவுகளைக்
களவாடியவளும் நீ தான்
என்னை எதிர்பார்க்க
வைத்தவளும் நீ தான்......
உன் பார்வைகளின்
அர்த்தங்களைச் சொல்லிவிடு
உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது
என் கண்கள்.......
பறிக்கப்படாத மலரைப் போன்றது
சொல்லப்படாத என் காதல்..........!!!
ஒரு பொய்யாவது சொல்
உன் காதல் நான் தான் என்று........
-வசந்தம்.
Friday, 16 August 2013
மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.
Subscribe to:
Posts (Atom)